காவாலா பாட்டுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடி தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்… வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

காவாலா பாட்டுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடி தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்… வைரலாகும் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். தென்னிந்திய நடிகைகளின் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் கிட்டத்தட்ட 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சௌந்தர்யா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மனாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர்.

அதன் பிறகு பல சாமி திரைப்படங்களிலும் நடித்தார். அதுமட்டுமல்லாமல் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஜினியுடன் மீண்டும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது 50 வயதை கடந்துள்ள ரம்யா கிருஷ்ணன் இதுவரை இளம் நடிகைகளை போல இவரும் தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

சுமார் 35 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறார். இதனிடையே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கிருஷ்ண வம்சி என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து வெளியான காவலா பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

✨Prakruthi Ananth 💄🎨✨ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prakatwork)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in