LATEST NEWS
சுத்தமா நடிக்கவே வரல, இந்த நடிப்பை வச்சுட்டு எப்படின்னு அம்மா கேட்டாங்க… சுவாரஸ்யமான சினிமா பயணத்தை பகிர்ந்த ரம்யா கிருஷ்ணன்..!!

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். தென்னிந்திய நடிகைகளின் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் கிட்டத்தட்ட 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகை சௌந்தர்யா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மனாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர்.
அதன் பிறகு பல சாமி திரைப்படங்களிலும் நடித்தார். அதுமட்டுமல்லாமல் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 24 வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரம்யா கிருஷ்ணன், வெள்ளை மனசு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாகத்தான் நான் முதல் முதலில் சினிமாவில் நுழைந்தேன். சினிமாவில் நுழைந்தபோது ஆரம்பத்தில் எனக்கு சுத்தமாக நடிப்பு வரவே இல்லை. அப்போது நான் ஒரு சிறந்த நடிகையும் கிடையாது. 1988 ஆம் ஆண்டு நான் நடித்த முதல் வசந்தம் என்ற திரைப்படத்தை இப்போது பார்த்த என்னுடைய அம்மா நீ இந்த நடிப்பை வைத்துக்கொண்டு இவ்வளவு காலம் நடிகையாக எப்படி நீடிக்கிறாய் என்று ஆச்சரியப்பட்டு என்னிடம் கேட்டார்.
அதிலிருந்து என்னுடைய நடிப்பு அப்போது எப்படி இருந்தது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். அது மட்டும் அல்லாமல் நான் நடித்த பல திரைப்படங்களும் தோல்வியை சந்தித்ததால் தெலுங்கு சினிமா துறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக அங்கு கிடைத்த ஒவ்வொரு பட வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நான் வளர்ந்தேன் என்று ரம்யா கிருஷ்ணன் பேசியுள்ளார்.