LATEST NEWS
என்னால முடியல, இதனால தான் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்தேன்.. முதல் முறையாக மனம் திறந்த தொகுப்பாளினி டிடி..!!

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது அதர்வா நடித்துள்ள மத்தகண் என்ற திரைப்படத்தில் டிடி நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.
தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து வெளியேறியது குறித்து டிடி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், மணிகணக்காக படப்பிடிப்பு நேரத்தில் நின்று கொண்டிருந்ததால் எனக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டது. பொதுவாக விஜய் டிவியில் நான் தொகுத்து வழங்காத நிகழ்ச்சி இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.
அப்போதெல்லாம் தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது முழுக்க முழுக்க தொகுப்பாளர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். அது எனக்கு மட்டுமல்ல தொகுப்பாளராக இருக்கும் அனைவருக்குமே இதே நிலைமைதான். ஒரு கட்டத்தில் என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதால் எனக்கு நிகழ்ச்சிகள் குறைய தொடங்கி விட்டது. அதனால் தான் விஜய் டிவியில் இருந்து நான் வெளியேறினேன் என்று டிடி வெளிப்படையாக கூறியுள்ளார்.