LATEST NEWS
வாழ்க்கையில இப்படி ஒரு ஆள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.. மனைவியுடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்..!!

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு சீரியல் அதிகம் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி மறுபக்கம் ஆடை அணிகலன் சார்ந்த சேலை மற்றும் பல பொருள்களை விளம்பரம் படுத்தி வருகிறார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதியினர் அடிக்கடி வெளியில் செல்லும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அதன்படி தற்போது தனது மனைவியுடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வீடியோவாக பதிவிட்டு தயாரிப்பாளர் ரவீந்தர் உருக்கமான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க