LATEST NEWS
அதிமுக போட்ட புதிய பாம்…! த்ரிஷா, அர்ச்சனா கல்பாத்தியை இழுத்து.. விஜய்யை சீண்டிய ஆர்.பி.உதயகுமார்..!!
முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷாவைத் தமிழகத்தின் துணை முதல்வர் என மீண்டும் குறிப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தமிழக முதல்வர் விஜய்யின் அன்பிற்குரியவரான அண்ணியார் த்ரிஷாவை எப்போது துணை முதல்வராக அறிவிப்பீர்கள் என்று அன்னைத் தமிழகம் ஆவலோடும் அதிர்ச்சியோடும் காத்துக் கொண்டிருக்கிறது” எனக் கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
மேலும், விஜய் படங்களில் பணியாற்றியவர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் அரசு நியமனத்தையும் கடுமையாகச் சாடியுள்ளார். விஜய் படங்களில் பணியாற்றியிருந்தாலே அவர்களுக்கு அரசுப் பதவி நிச்சயம் என்ற நிலை உருவாகியிருப்பதாக விமர்சித்துள்ள ஆர்.பி.உதயகுமாரின் இந்த பேச்சு, தற்பொழுது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
