LATEST NEWS
மலேசியாவில் காதலரை ரகசிய திருமணம் முடித்த ரோஜா சீரியல் நடிகை…. வைரலாகும் திருமண புகைப்படங்கள்…..!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா நல்காரி ரகசிய திருமணத்தை முடித்துள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த இவர் தனது 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்திங் சம்திங் மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
அதன் பிறகு இவருக்கு சினிமாவின் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்ற இவருக்கு சீரியல்களில் அதிக வாய்ப்புகள் கிடைத்தன.
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து தெலுங்கு சீரியல்களில் அதிக அளவு நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய ரோஜா சீரியலில் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
அந்த சீரியலில் நடிகை சிபுவிற்கு ஜோடியாக இவர் நடித்து வந்தார். இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியதால் இதன் டிஆர்பியும் அதிகரித்தது.
இன்னும் சொல்லப்போனால் மக்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றாக ரோஜா சீரியல் மாறி 4 வருடங்களாக ஒளிபரப்பானது.இந்த சீரியல் கலந்த வருடம் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகு சீதாராமன் என்ற சீரியலில் தற்போது பிரியங்கா நடித்து வருகின்றார்.
இந்த சீரியல் அண்மையில் தொடங்கப்பட்ட நிலையில் இதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
இந்த சீரியலில் பிரபல வில்லி நடிகையான ரேஷ்மா நடித்து அசத்தி வருகிறார். இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி தற்போது மலேசியாவில் ரகசிய திருமணத்தை முடித்துள்ளார். மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் பிரியங்கா ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை காதலுக்கு கரம் பிடித்துள்ளார்.
பல சிக்கல்களைத் தாண்டி தனது திருமணம் நடைபெற்றுள்ளதாக பிரியங்கா கூறியுள்ள நிலையில் அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.