VIDEOS
இது வேற லெவல்… 4 டிகிரி ஐஸ் நீரில் குளித்த சமந்தா… வீடியோவை பார்த்து அசந்து போன ரசிகர்கள்…!!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சமந்தா தற்போது இந்தோனேசியாவின் பாலிக்கு தனது தோழிகளுடன் சுற்றுலா சென்று உள்ளார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது சமம் தான் நான்கு டிகிரி குளிர்ந்த நீரில் குளித்துள்ளார். அவர் ஆறு நிமிடம் ஐஸ் பாத் எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Icebath 🥶🧊…
. @Samanthaprabhu2 #SamanthaRuthPrabhu #Kushi pic.twitter.com/TJlJIIfZc8
— Trends Samantha™ (@Trends_Samantha) July 26, 2023
