LATEST NEWS
செம லுக்…. ஸ்மார்ட்டான உடையில் ரசிகர்களை மயக்கும் விஜய் டிவி டிடி…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
இதனிடையே பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி தற்போது உடல் நல குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். முக்கியமான படங்களின் ப்ரோமோஷன் இன்டர்வியூ மட்டும் தொகுத்து வழங்கி வரும் இவர் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ சூட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க