“என் கணவர் என்ன நடிக்கவே கூடாதுன்னு சொல்லிட்டாரு”…. எதிர்நீச்சல் ஜான்சி ராணி எமோஷனல் ஸ்பீச்…!!! - cinefeeds
Connect with us

VIDEOS

“என் கணவர் என்ன நடிக்கவே கூடாதுன்னு சொல்லிட்டாரு”…. எதிர்நீச்சல் ஜான்சி ராணி எமோஷனல் ஸ்பீச்…!!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஜான்சி ராணி. இந்த சீரியலில் குணசேகரனுக்கு டப் கொடுக்கும் விதமாக ஜான்சி ராணி கேரக்டர் இடம் பிடித்துள்ளது. இவரின் நிஜ பெயர் காயத்ரி கிருஷ்ணன். இதற்கு முன்பு இவர் சமீபத்தில் வெளியான அயலி வெப்சீரிஸ் திரைப்படத்தில் மைதிலியின் அம்மாவாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

அதே சமயம் நடிகர் சிம்பு நடித்த பெரிய அளவில் வெற்றி பெற்ற வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்திலும் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் இவர் குறித்த செய்தியும் இவர் அளித்த பேட்டியும் தான் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

அந்த அளவிற்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்த உடனே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் இந்த இடத்தில் இருப்பதற்கு தன்னுடைய மாமியாரும் கணவரும் தான் முக்கிய காரணம் எனவும், முதலில் தான் நடிப்பதற்கு தடை போட்ட கணவர் தற்போது தன்னை ஊக்கப்படுத்தி வருவதாகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். தற்போது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Christy இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@christy___official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in