LATEST NEWS
“ரத்த சொட்ட சொட்ட அடிப்பான்”… எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன்… ஆனா… விவாகரத்து குறித்து மனம் திறந்த சீரியல் நடிகை ஷாலினி..!!

முள்ளும் மலரும் தொடர் மூலம் பிரபலமானவர் தான் ஷாலினி. இவர் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். அண்மையில் இவர் தன்னுடைய கணவருடன் விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில் போட்டோ சூட் எடுத்து பல புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கணவருடன் விவாகரத்து குறித்து பேசி உள்ளார்.
அதில், என்னுடைய முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். அதன் பிறகு பெற்றோருடன் வசித்துக் கொண்டிருந்தபோது ரியாஸ் உடன் பழக்கம் ஏற்பட திருமணம் செய்து கொண்டோம். முதலில் அன்பாக பார்த்துக் கொண்ட அவர் சில நாட்களில் என்னை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார்.
முதல் வாழ்க்கை தான் அப்படி போய்விட்டது இந்த வாழ்க்கையையும் இழக்கக்கூடாது என்று அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்று சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் மது அருந்த சொல்வார். ஒரு நாள் அதிகமாக மது அருந்திவிட்டு தூங்கி விட்டேன். அப்போது என் மேல் தண்ணீரை ஊற்றி நீ மட்டும் நல்லா தூங்குறியா என அடித்து துன்புறுத்தினார்.
அப்போது என் தலையில் ரத்தம் வடிந்தது. அதனைப் பார்த்து ரத்தம் வர அளவிற்கு என்னை அடிக்க வச்சுட்டியே என்று சொல்லி மீண்டும் பயங்கரமாக அடித்தார். அவன பாத்தா எல்லாருமே நல்லவன்னு தான் நினைப்பாங்க. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத நான் விவாகரத்து செய்து பிரிந்து விட்டேன் என நான் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களை பகிர்ந்துள்ளார்.