தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சினிமாவில் பாடகையாக அறிமுகமான நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.
அதனை தொடர்ந்து நடிப்பில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்த இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர். ஆனால் சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.
அதன்படி தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணா நடித்த வீரசிமா ரெட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல ஹிட் கொடுத்துள்ளதால் ஸ்ருதிஹாசன் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிஹா என்பவரை காதலித்து வரும் நிலையில் ஒன்றாக வசித்து வரும் இருவரும் அவ்வப்போது நெருக்கமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது சாந்தனு வீட்டுக்கு திரும்பி நிலையில் இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொள்ளும் வீடியோவை ஸ்ருதிஹாசன் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க