LATEST NEWS
பிரதீப் ஹீரோவாக நடிக்கும் 2-வது படத்திலேயே.. பிரபல நடிகர் மற்றும் காமெடியனை களமிறக்கிய தயாரிப்பு நிறுவனம்.. அப்போ படம் வேற லெவெலில் இருக்க போகுது..!!

விக்னேஷ் சிவன் இயக்கம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.
அதன் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் LIC படத்தில் பிரதீப் இரண்டாவது முறையாக கதாநாயகனாக நடிக்க கமிட் ஆனார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார். LIC படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் காமெடி நடிகர் யோகி பாபு, பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எஸ்.ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படம் மாபெரும் அளவில் ஹிட்டானது.
அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி எஸ்.ஜே சூர்யா நடித்து கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் LIC படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பை சிங்கப்பூரில் நடத்த படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.