LATEST NEWS
தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக களமிறங்கும் இலங்கை தமிழ் பெண்… ஹீரோ யார் தெரியுமா..??

காக்கா முட்டை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் புது வேதம் என்ற திரைப்படத்தில் தற்போது கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை ராசா விக்ரம் இயக்கும் நிலையில் படத்தில் விக்னேஷ் ஜோடியாக வருணிகா என்பவர் நடிக்கின்றார்.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த வருணிகா அங்கு உள்நாட்டு போர் நடந்த போது அங்கிருந்து குடும்பத்துடன் சென்னை வந்து செட்டில் ஆனார். நடிப்பு மீது அதிக ஆசை கொண்ட இவர் சினிமா ஆடிஷன்களில் கலந்து கொண்டு சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது இவருக்கு ஹீரோயினியாக வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் புது வேதம் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாகிறார்.
சென்னையில் உள்ள குப்பை மேடுகளில் வாழும் மக்களைப் பற்றிய ஒரு கதை தான் இது. அந்தப் பகுதியில் வாழும் ஏழை பெண்ணாக வருணிகா இந்த திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.