குட்டி AJ வின் 1/2 birthday – வை கேக் வெட்டி கொண்டாடிய சூப்பர் சிங்கர் அஜய்… வைரலாகும் வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டி AJ வின் 1/2 birthday – வை கேக் வெட்டி கொண்டாடிய சூப்பர் சிங்கர் அஜய்…  வைரலாகும் வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்…

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பல வருடங்களாக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது ‘சூப்பர் சிங்கர்’ மட்டுமே. இது ஜூனியர், சீனியர் என்று இருபிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெள்ளி திரைக்கு சென்ற பாடகர்கள் ஏராளம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவை பெற்றவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பலமுறை பாடி அனைவரையும் அசர  வைத்துள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர். இந்த நிகழ்ச்சி மூலம் தான் அஜய் கிருஷ்ணா மீடியாவுக்குள் நுழைந்தார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல படங்களில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் பிரபல பாடகராக ஜொலித்துக் கொண்டுள்ளார்.அஜய் கிருஷ்ணா தான் பல வருடங்களாக காதலித்து வந்த ஜெசி  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அஜய் கிருஷ்ணாவின் மனைவி  ஜெசி கர்ப்பமாகி சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இதை அறிந்த ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறினர். தற்பொழுது குட்டி AJ விற்கு 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் 1/2 பர்த்டே-வை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Jessy Ajay✨ (@prathimma_jessy)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in