CINEMA
சினிமா இல்லையென்றால் இறந்து விடுவேன்…. அழுத்தம் கொடுத்தால் பதவி விலகுவேன் – சுரேஷ் கோபி..!!
மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா என்னுடைய பேஷன். சினிமா இல்லையென்றால் நான் இறந்து விடுவேன். 22 படங்கள் முடிக்க வேண்டியது உள்ளது என்று அமித்ஷாவிடம் கூறிய போது அந்த பேப்பரை அவர் தூக்கி வீசினார். திருச்சூர் மக்களுக்கு நன்றியை திரும்ப செலுத்தவே அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளேன்.
பட சூட்டிங் போது நான்கு அதிகாரிகள் என்னுடன் இருக்க வேண்டும். அதற்கான செலவை பட தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.படங்களில் நடிக்க கூடாது என்று அழுத்தம் வந்தால் அமைச்சர் பொறுப்பை விட்டு மகிழ்ச்சியுடன் விலக தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.