LATEST NEWS
ரியல் லைப்பில் தர்ம அடி வாங்கிய தமிழ் சினிமா பிரபலங்கள்… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க… இதோ பாருங்க..!!

பொதுவாக சினிமா பிரபலங்கள் திரைப்படங்களில் நடிக்கும் போது எதிரிகளை நடுரோட்டில் போட்டு அடித்து உதைப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அது போன்ற சம்பவத்தை ரியல் லைஃபிலும் சிலர் சந்தித்துள்ளனர்.அப்படி பொது இடத்தில் தர்ம அடி வாங்கிய தமிழ் சினிமா பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன் காக்கிச்சட்டை திரைப்பட ரிலீஸ் சமயத்தில் கமல் ரசிகர் ஒருவரிடம் தர்ம அடி வாங்கியுள்ளார். அதாவது காக்கிச்சட்டை திரைப்படத்தில் கமலை கிண்டல் செய்ததற்காக சிவகார்த்திகேயன் தூத்துக்குடி விமான நிலையம் வந்த போது அங்கிருந்த கமல் ரசிகர்கள் திடீரென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
விஜய் சேதுபதி:
பெங்களூரு விமான நிலையத்தில் நபர் ஒருவர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பதற்கு வந்த நிலையில் அந்த அடி விஜய் சேதுபதியின் பாதுகாவலர் மீது விழுந்து விட்டது. அவருடன் புகைப்படம் எடுக்க விடாததால் இப்படி நடந்ததாக கூறப்பட்டாலும் உண்மையில் முத்தையா முரளிதரணி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவர் நடிக்க ஒப்பு கொண்டதால் தான் இந்த தாக்குதல் முயற்சி நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
விஷால்:
நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெறப் போவதை அறிந்த எதிர் அணியினர் விஷாலை தனியாக கூட்டிச்சென்று தர்ம அடி கொடுத்துள்ளனர். அதன் பிறகு மீடியா முன்பு நடந்ததை கூறி அனுதாபமாக அதனை மாற்றி விஷால் மயக்கம் போட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
வடிவேலு:
மதுரையில் விஜயகாந்த் வீட்டுக்கு வடிவேலு சென்று இருந்தபோது அங்கிருந்த சிலரிடம் தானும் டெரறான ஆள் தான் என்று பில்டப் கொடுத்து பேசியுள்ளார். இதனால் மதுரைக்காரர்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அந்தக் கோபத்தில் வடிவேலு 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது விஜயகாந்தை தர குறைவாக பேசினார்.
ஸ்ருதிஹாசன்:
தமிழ் சினிமாவில் மற்ற நடிகைகளுடன் ஒப்பிடும்போது இவருக்கு அதிக பிரச்சனைகள் வந்துள்ளது. மும்பையில் அவர் வீட்டில் வசித்த போது ஒருவர் வந்து வீட்டின் கதவை தட்டி உள்ளார். அப்போது கதவை திறந்த சுருதிஹாசனை தலையைப் பிடித்து தரதரன இழுத்துச் சென்று அடித்து விட்டு அங்கிருந்து அவர் தப்பிவிட்டார்.