CINEMA
ரொம்ப நாள் ஆசை…. இந்த பிளாக்பாஸ்டருக்காக தான் காத்திருந்தேன்…. ஹரீஷ் கல்யாண் நெகிழ்ச்சி…!!
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது . படம் வெளியாகி முதல் நாளில் உலக அளவில் 70 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. படத்தை ரசிகர்கள் வருகிறார்கள். இந்த நிலையில் ‘லப்பர் பந்து’ படத்தை கொண்டாடும் ரசிகர்களுக்கு ஹரிஷ் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். படத்தின் வெற்றி விழா வில் பேசிய அவர், இந்த பிளாக்பஸ்டருக்காகதான் காத்திருந்தேன். மேலும், கிராமத்துக் கதையில் நடிக்க நீண்ட நாள்களாக காத்திருந்தேன். கிரிக்கெட் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறிய அவர், இரண்டும் ஒரே படத்தில் அமைந்தது ஜாக்பாட் என்றார்.