LATEST NEWS
கயல் சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்?…. ஷாக்கான ரசிகர்கள்…. அவரே போட்ட பதிவு….!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கயல் சீரியல் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த சீரியலில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த தொடர் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதில் தினம் தோறும் கயல் சந்திக்கும் போராட்டங்கள் குடும்பப் பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ் தற்போது அதிலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பதிவை ஷேர் செய்து ரசிகர்களின் கருத்தை கேட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.