LATEST NEWS
இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்…. நாளை யார் தெரியுமா?…. உறுதியாக வெளிவந்த தகவல்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 60 நாட்களைக் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து வர போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வருகிறார்கள்.
கடந்த வாரம் போட்டியாளர்களை கமல்ஹாசன் கடுமையாக எச்சரித்த நிலையில் தற்போது போட்டியாளர்கள் ஓரளவு விளையாட்டில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனிடையே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் இந்த வாரம் வழக்கம் போல ஒரு எலிமினேஷன் மட்டுமல்லாமல் டபுள் எலிமினேஷன் இருக்கிறது என கமல்ஹாசன் கடந்த வாரமே தெரிவித்திருந்த நிலையில் அந்த இரண்டு பேர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு ராம் வெளியேறி விட்டதாகவும் இவரைத் தொடர்ந்து நாளை ஆயிஷா வெளியேற உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இதில் ராம் வெளியேறிவிட்டது உறுதியாகியுள்ள நிலையில் நாளை ஆயிஷா வெளியேறுவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.