LATEST NEWS
இதெல்லாம் ஒரு game – ஆ?… TRP க்காக என்ன வேணுன்னாலும் பன்னுவீங்களா?… zee தமிழின் பிரபல ரியாலிட்டி ஷோவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்…

பொதுவாகவே சேனல்கள் ரசிகர்களை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை அவர்களுக்கு பிடித்தவாறு புதிது புதிதாக உருவாக்கி வருகின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பல ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது. அந்தவகையில் ஜி தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோ டக்கர் டக்கர்.
இந்நிகழ்ச்சியில் பல விதமான போட்டிகள் போட்டியாளர்களுக்கிடையே நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். அந்தவகையில் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகை ரேமா இந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த வார டக்கர் டக்கர் ஷோவில் கலந்து கொண்ட ரேமா வலியால் கத்தும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது போட்டியில் போட்டியாளர்களின் கால்களில் hair removal wax செய்வதையும், அதனால் அவர்கள் வலியால் துடித்தாலும் முகத்தில் expression உடன் பாட்டும் பாட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ‘ இதெல்லாம் ஒரு game – ஆ? TRP க்காக என்ன வேணுன்னாலும் பன்னுவீங்களா? என ஜீ தமிழை வெளுத்து வாங்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram