LATEST NEWS
“ஒரு சாண் கயிறு வாங்கி தூக்கு மாட்டி சாவுங்க!” பதவிப் பிச்சை கேட்டுத் திருவோடு ஏந்தி நிற்கும் பாவிகள்…. தவெக-வுக்கு ஓடிய மாஜிக்கள் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் ஆவேசம்..!!
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி மாறிய நிர்வாகிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதாவது, விஜய் மக்கள் இயக்கத்தில் முப்பது ஆண்டுகாலம் உழைத்த தகுதியான நிர்வாகிகள் பலர் வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசியல் அடைக்கலம் தேடிவந்த ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வாரி வழங்கி விஜய் வள்ளலாகக் காட்சியளிக்கிறார். எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவை அபகரிக்கும் ரகசியத் திட்டத்துடனேயே அவர் இத்தகைய அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறார்.
அதிமுகவில் ஆடுபுலி ஆட்டத்தை அரங்கேற்றி, தினமும் ராஜினாமா நாடகங்களை நடத்தி வரும் இந்த விபரீத விளையாட்டை விஜய் மனதுக்குள் ரசித்து மகிழ்கிறார். ஜெயலலிதா கொடுத்த அரசியல் வாழ்வை வைத்தும், எடப்பாடி பழனிசாமியின் கைகால்களைப் பிடித்துப் பதவிகளைப் பெற்றும் தங்களது வாழ்வை வசந்தமாக்கிக் கொண்டவர்கள் இவர்கள்.
வீரத்தோடு மார்தட்டியவர்கள் எல்லாம் இன்று பனையூர் வாசலில் பதவிப் பிச்சை கேட்டுத் திருவோடு ஏந்தி நிற்கும் பாவிகளாக மாறியுள்ளனர். இத்தகைய ஈனப் பிழைப்பை நடத்துவதற்குப் பதிலாக, ஒரு சாண் கயிற்றில் தூக்கில் தொங்கி தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளலாம்.
பதவி கேட்டுத் திருவோடு ஏந்தி நிற்கும் ஈனப் பிறவிகளுக்கு மட்டுமின்றி, தவெக தலைவர் விஜய்க்கும் சேர்த்து மக்கள் சார்பாகக் கூறிக் கொள்வது என்னவென்றால், இந்த அவமானகரமான பிழைப்பை நடத்துவதை விட, நான்கு வீடுகளில் பிச்சை எடுத்து நிம்மதியாக வாழ்ந்துவிடலாம் என்பதே ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணமாக உள்ளது என்று காட்டமாக விளர்சித்துள்ளார்.
