LATEST NEWS
கூட்டணிக்குள் வெடித்த மோதல்..! திருச்சி, நெல்லை, குமரியைக் குறிவைக்கும் காங்கிரஸ்… உள்ளாட்சித் தேர்தலில் 30% இடம் கேட்டு அடம்.. கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள்..!!
வரவிருக்கும் தமிழ்நாட்டு உள்ளாட்சித் தேர்தலில், சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸுடன், இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. காங்கிரஸ் 30% இடங்களைக் கோருவதாகவும், தவெக தரப்பு 15-20% வரை மட்டுமே வழங்க முடியும் என்ற எதிர்-வியூகத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
.கடந்த தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடக் குறைவாகப் பெற்றுள்ள தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி செய்வதால், இந்த உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீட்டு விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக, திருச்சி, கன்னியாகுமரி, மற்றும் நெல்லை போன்ற பகுதிகளில் அதிக இடங்களைக் கோரி காங்கிரஸ் பேரம் பேசி வருவதால், தவெக அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. 7 தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள்வது தவெக தலைமைக்கு சவாலாக அமைந்துள்ளது.
