LATEST NEWS
சார்..! இந்த ஈனப்பொழப்புக்கு… நாலு வீட்ல பிச்சை எடுத்து வாழலாம்.. முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய மாஜி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தில் 30 ஆண்டுகாலம் உழைத்த நிர்வாகிகள் பலர் வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், அரசியல் அடைக்கலம் தேடிவந்த ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை விஜய் வாரி வழங்கி வருகிறார். எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவை அபகரிக்கும் ரகசியத் திட்டத்துடனேயே விஜய் இத்தகைய அதிரடி சலுகைகளை அறிவித்து, தினமும் ராஜினாமா நாடகங்களை அரங்கேற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த அரசியல் வாழ்வை வைத்தும், எடப்பாடி பழனிசாமியின் கைகால்களைப் பிடித்துப் பதவிகளைப் பெற்றும் தங்களது வாழ்வை வசந்தமாக்கிக் கொண்டவர்கள் இவர்கள் என்று உதயகுமார் சாடியுள்ளார். அன்று வீரத்தோடு மார்தட்டியவர்கள் எல்லாம் இன்று பனையூர் வாசலில் பதவிப் பிச்சை கேட்டுத் திருவோடு ஏந்தி நிற்கும் பாவிகளாக மாறியுள்ளனர் என்றும், இத்தகைய அவமானகரமான ஈனப் பிழைப்பை நடத்துவதற்குப் பதிலாக ஒரு சாண் கயிற்றில் தூக்கில் தொங்கி தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் காட்டமாகப் பேசியுள்ளார்.
மேலும், பதவி கேட்டு விஜய் வீட்டில் திருவோடு ஏந்தி காத்துக் கிடக்கிற அந்த ஈனப்பிறவிகளுக்கு மட்டுமின்றி, தவெக தலைவர் விஜய்க்கும் சேர்த்து மக்கள் சார்பாகக் கூறிக் கொள்வது என்னவென்றால், இந்த ஈனப் பொழப்பு பிழைப்பதை விட, நான்கு வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்ந்துவிடலாம் என்பதே ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணமாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தனது வீடியோ பதிவில் மிகவும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
