வேட்டையன் கெட்டபில் ராகவா லாரன்ஸ்… வைரலாகும் சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… ரிலீஸ் எப்போது தெரியுமா..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

வேட்டையன் கெட்டபில் ராகவா லாரன்ஸ்… வைரலாகும் சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… ரிலீஸ் எப்போது தெரியுமா..??

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படத்தை தற்போது பி வாசு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதனைப் போலவே சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத் நடித்துள்ள நிலையில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன் மற்றும் சிருஸ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் நேற்று சந்திரமுகி 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisement

அதில் வேட்டையின் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் மிரட்டியுள்ளார். இந்த போஸ்டருடன் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

dorothy jaishankar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dorothyjai)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in