டப்பிங் பணியின் போது திடீரென பின்னால் கிளம்பிய சந்திரமுகி.. நொடி பொழுதில் பயத்தில் நடுங்கிய வடிவேலு.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

டப்பிங் பணியின் போது திடீரென பின்னால் கிளம்பிய சந்திரமுகி.. நொடி பொழுதில் பயத்தில் நடுங்கிய வடிவேலு.. வைரல் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படத்தை தற்போது பி வாசு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதனைப் போலவே சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத் நடித்துள்ள நிலையில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன் மற்றும் சிருஸ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் செப்டம்பர் மாதம் திரைப்படம் வெளியாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் தற்போது திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் வடிவேலு திரைப்படத்திற்கான வசனத்தை பேசிக் கொண்டிருந்தபோது இடையில் சந்திரமுகி வசனத்தை பணியாளர்கள் பின்னால் போட்டு விடுகின்றனர். அதனால் திடக்கென பயந்து நடிகர் வடிவேலு ஒரு நிமிடம் வியர்வை சொட்ட பதில் அளிக்கின்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வர இதனை பார்த்த ரசிகர்கள் எங்கு சென்றாலும் வடிவேல் போல் வராது என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in