LATEST NEWS
ஆதித்ய கரிகாலனாக முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்…..! கடைசியில் டுவிஸ்ட் வைத்த மணிரத்தினம்….!!!!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலைத் தழுவி மணிரத்தினம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று என்ற திரைப்படம். கடந்த 30ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்து வருகின்றது. தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் செய்யாத சாதனையை இந்த திரைப்படம் செய்துள்ளது, என்று கூறி வருகின்றனர்.
இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள். அந்த கதாபாத்திரத்தில் ஒன்றியுள்ளனர் என்று கூறி வருகிறார்கள். இது திரைப்படத்தில் ஒரு சஸ்பென்ஸ் உருவாக்கும் கதாபாத்திரம் என்றால் அது ஆதித்ய கரிகாலன்தான்.
இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் மணிரத்தினம் தேர்வு செய்தது கார்த்திக்கை என்று கூறுகிறார்கள். வந்தியத்தேவன் எனும் கலகலப்பான கேரக்டரில் நடித்திருக்கும் கார்த்திக்கு, முதலில் கரிகாலனாக நடிப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்தது.
இதனை பல வருடங்களுக்கு முன்பே மணிரத்தினம் இவரிடம் கூறியுள்ளார். கார்த்திக்கும் அந்த கதாபாத்திரம் பிடித்து போக நான் கரிகாலனாக நடிக்க ஆசைப்படுவதாக கூறினார். அதன் பிறகு பொன்னின் செல்வன் திரைப்படம் உருவாகும்போது, மணிரத்தினம் கார்த்திக்கு வந்தியத்தேவன் கேரக்டர் தான் சரியாக இருக்கும் என்று கூறி அதில் நடித்து சொல்லி இருக்கிறார்.
அவரும் மணிரத்தினம் அவரின் வார்த்தையை கேட்டு அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தைப் பார்த்த பலரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் பக்காவாக பொருந்தியுள்ளது. இதற்கான முழு பெருமையும் மணிரத்தினத்தை மட்டுமே சேரும் என்று தெரிவித்துள்ளனர்.