VIDEOS
குழந்தை பிறப்பை லைவ்வாக வீடியோ எடுத்து வெளியிட்ட விஜய் பட நடிகை… பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை லின்டு ரோனி. இவர் மலையாள சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் சில தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றும் ரோனி எய்ப்பன் மேத்யூ என்ற நபரை திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டிருந்தார்.
அப்போதிலிருந்து குழந்தை பெறுவது வரை உள்ள வீடியோவை தொகுத்து தற்போது அவர் தனது youtube இல் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குழந்தை பிரசவம் ஆகும் காட்சியும் லைவாக தெரிகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அதே சமயம் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்