“இனி நானே ராஜா” அந்த 15 பேர் வந்தா போதும்…கூட்டணிக்கு ‘நோ’… தனித்து ஆளத் துடிக்கும் விஜய்… தவெக-வின் மெகா திட்டத்தால் அதிரும் தமிழக அரசியல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி நானே ராஜா” அந்த 15 பேர் வந்தா போதும்…கூட்டணிக்கு ‘நோ’… தனித்து ஆளத் துடிக்கும் விஜய்… தவெக-வின் மெகா திட்டத்தால் அதிரும் தமிழக அரசியல்..!!

Published

on

தமிழக அரசியல் களத்தில் தவெகவின் தேர்தல் கூட்டணி மற்றும் வியூகங்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கம்யூனிஸ்ட்களின் ஆதரவைத் தவிர்ப்பதற்காகவே, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர தவெக தலைமை திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது; ஆனால், தவெகவின் இந்த வியூகத்திற்கு விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சட்டமன்றத்தில் தவெகவிற்கு 109 எம்.எல்.ஏ-க்கள் உள்ள சூழலில், அடுத்ததாக வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றால் கட்சியின் பலம் 114-ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த மேலும் 15 எம்.எல்.ஏ-க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

Advertisement

இந்த வியூகங்களின்படி, அந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் தவெக வெற்றி பெற்றால், எந்தவொரு கட்சியின் துணையும் இல்லாமல் கூட்டணியின்றி தனித்தே ஆட்சி நடத்தலாம் என்று முதலமைச்சர் விஜய் எண்ணுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மற்ற கட்சிகளின் நெருக்கடிகள் இன்றி முழுமையான பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தொடர தவெக தலைமை திட்டமிட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in