LATEST NEWS
மரணப் பிடியில் சிக்கிய மூவர்..! திடீரென வெடித்துச் சிதறிய எரிமலை… மலையேறும் வீரர்களுக்கு நேர்ந்த விபரீதம்..! திகிலூட்டும் வைரல் வீடியோ..!!
இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் டுகோனோ எரிமலை திடீரென வெடித்துச் சிதறியதில், உச்சிப் பகுதிக்கு அருகில் சென்ற மூன்று மலையேறும் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எரிமலை வெடிக்கக்கூடும் என்று முன்பே கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், சுற்றுலாப் பயணிகளை அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் அலட்சியமா அல்லது பாதுகாப்புப் பணியாளர்களின் தவறா என்பது குறித்து அப்பகுதி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், சம்பந்தப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளிடமும் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
