CRIME
ஐயோ கொடுமையே.. பிள்ளைகள் செய்த சின்ன சண்டை.. நடுராத்திரியில் 38 வயது குடும்பத்தலைவருக்கு நேர்ந்த பயங்கரம்.. பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தின் பீவார் காவல் எல்லைக்குட்பட்ட கம்லேஷ் கா புர்வா கிராமத்தில், சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு பெரியவர்களுக்குள் முற்றி ரத்தக்களரி மோதலாக மாறியதில் ராம்கரன் (38) என்ற நபர் கோடரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரவு சுமார் 11 மணியளவில் ராம்கரன், குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் குமாரின் வீட்டுக்குச் சென்று அவரது பிள்ளைகளின் சண்டை குறித்துப் புகார் அளித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் திடீரென விபரீதமாக மாறவே, ஆத்திரமடைந்த சுரேஷ் குமார் கோடரியால் ராம்கரனைத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராம்கரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்தவுடன் பீவார் காவல் நிலையப் போலீஸாரும் தடய அறிவியல் களப்பிரிவுக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து பெறப்பட்ட எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் சுரேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ராம்கரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் மிருகங்க் சேகர் பதக் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கிடையேயான சண்டையில் ஒரு உயிரே பறிபோன இந்தச் சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான சுரேஷ் குமாரைக் கைது செய்யக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
