LATEST NEWS
அடடே…. நடிகை நீலிமா ராணிக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா?…. பலரையும் அசர வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னொரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நீலிமா ராணி.இவர் உலகநாயகன் கமல் நடித்த தேவர்மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், சிம்பு நடித்த தம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்த அசத்தியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் இதுவரை 15க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் நடித்துள்ளார். இதனிடையே நடிகை நீலிமா ராணி சில வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
குழந்தை பிறந்ததற்கு பிறகு சீரியல்களில் இருந்து விலகிய நீலிமா ராணி தற்போது ஆங்கரிங் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அடிக்கடி தனது குடும்பத்துடன் வெளியில் செல்லும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நீலிமா தற்போது குழந்தைகளுடன் பீச் மற்றும் கோவில் போன்ற இடங்களுக்கு குடும்பத்தோடு சென்ற புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க