இந்த பிஞ்சுவயசிலேயே தங்கை மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்… இந்த அண்ணன், தங்கை பாசத்தைப் பாருங்க.. சிலிர்த்திடுவீங்க..! - cinefeeds
Connect with us

VIDEOS

இந்த பிஞ்சுவயசிலேயே தங்கை மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்… இந்த அண்ணன், தங்கை பாசத்தைப் பாருங்க.. சிலிர்த்திடுவீங்க..!

Published

on

அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம்.

அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

Advertisement

இங்கேயும் அப்படித்தான். கலிபோர்னியா நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளுக்கான பேஸ்கட் பால் மைதானத்தில் தங்கை பேஸ்கட் பாலை நெட்டுக்குள் போட முயற்சித்தாள். அவளால் போட முடியவில்லை. இதனால் அந்த குட்டி மொட்டு அழத்தொடங்கியது. இதைப் பார்த்த அண்ணன், அண்ணன் என்றால் பெரிய வயதெல்லாம் இல்லை. அவனும் பொடியன் தான். நான்கு, ஐந்து வயது இருக்கும். தன் தங்கையை நெருங்கி வந்து அவள் கண்ணீரைத் துடைத்து, விட்டு அன்பாக முத்தம் கொடுக்கிறான்.

மேலும் தன் தங்கையை தன் பிஞ்சுக் கைகளால் தூக்கி அவளை பேஸ்கட் பால் நெட் அருகே கொண்டு செல்கிறான். இப்போது தங்கை பாக்ஸ்க்குள் பந்தைப் போட இரு குழந்தைகளின் முகங்களையும் பார்க்க வேண்டுமே! அடேங்கப்பா..இந்த பாசத்துக்கு இணையே கிடையாது. நீங்களே பாருங்களேன்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement