“ஹார்ன் அடித்ததற்கு இப்படியா..?!” பைக்கில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி.. சொகுசு காரில் வந்தவர்களின் வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஹார்ன் அடித்ததற்கு இப்படியா..?!” பைக்கில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி.. சொகுசு காரில் வந்தவர்களின் வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் பன்னா தேவி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஜி.டி. சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது அதிவேகமாக வந்த சொகுசு ஆடி கார் ஒன்று மோதிய விபத்தில் மனோஜ் குமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு இளைஞர் படுகாயமடைந்தார். கடந்த அக்டோபர் 20 அன்று சர்சௌல் அருகே அரங்கேறிய இச்சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பரவலான விவாதத்தையும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு சாதாரண சாலை விபத்து அல்ல, மாறாக திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று உயிரிழந்த மனோஜ் குமாரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். குடும்பத்தினரின் கூற்றுப்படி, பைக்கில் சென்ற மனோஜுக்கும் ஆடி காரில் வந்தவர்களுக்கும் இடையே சாலையில் வழிவிடுவது மற்றும் ஹார்ன் அடிப்பது தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் காரில் இருந்தவர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டி, மனோஜைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இந்த விரோதம் காரணமாகவே, அவர்கள் மனோஜின் பைக்கின் பின்புறத்தில் வேண்டுமென்றே காரை மோதியுள்ளனர்.

Advertisement

கார் மோதிய வேகத்தில் மனோஜும் அவரது நண்பரும் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், காரில் இருந்தவர்கள் வாகனத்தை மீண்டும் பின்னோக்கிச் செலுத்தி, சாலையில் விழுந்து கிடந்த மனோஜ் மீது ஏற்றிச் சென்றதாகக் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் காரை நிறுத்த முயன்று, அதன் மீது கற்களை வீசியபோதிலும் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். கபானா பகுதியைச் சேர்ந்த மனோஜின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பன்னா தேவி போலீசார், வைரலாகும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரையும் அதன் ஓட்டுநரையும் அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in