CRIME
நண்பனே எமனான கொடூரம்… 150 அடி தூரத்திற்குப் பறந்த ஸ்கூட்டர்… ஜிம் முடிந்து திரும்பிய பவுன்சருக்கு நேர்ந்த விபரீதம்.. பகலிலேயே அரங்கேறிய வெறிச்செயல்.. பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சிட்கோ என்-7 பகுதியில், தேவேஷ் என்ற பண்டி தீட்சித் (36) என்ற நபர் அவரது முன்னாள் நண்பரால் பகல் நேரத்திலேயே கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜிம்முக்குச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் பண்டி தீட்சித் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வான்கேடேநகரைச் சேர்ந்த பவன் பராஷர் (22) என்பவர் காரில் பின்தொடர்ந்து வந்துள்ளார். மங்கேஷ் கேஸ் ஏஜென்சிக்கு அருகில் வந்தபோது, பவனின் கார் பண்டியின் ஸ்கூட்டர் மீது மிக பலமாக மோதியதில், பண்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார், அவரது ஸ்கூட்டர் சுமார் 150 அடி தூரத்திற்குப் பறந்து போய் விழுந்தது.
விபத்தை ஏற்படுத்திய பிறகு, பவன் பராஷர் காரை யூ-டர்ன் செய்து திருப்பி, காரில் இருந்து இறங்கி வந்துள்ளார். தான் மறைத்து வைத்திருந்த மரக்கட்டை மற்றும் இரும்பு ராடைக் கொண்டு, சாலையில் படுகாயங்களுடன் கிடந்த பண்டியின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் பண்டி தீட்சித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்ட பவன் பராஷர் நேராக சிட்கோ காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் சரணடைந்தார். இவர்கள் இருவரும் வெவ்வேறு பார்களில் பவுன்சர்களாக வேலை பார்த்து வந்ததாகவும், தொழில் ரீதியான போட்டி மற்றும் பழைய முன்விரோதமே இந்த கொலைக்குக் காரணம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பயங்கரமான பகல் நேர கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
