காமெடி நடிகர் கிங் காங் மகன் இப்போ எப்படி வளந்துட்டார் பாருங்க : புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

காமெடி நடிகர் கிங் காங் மகன் இப்போ எப்படி வளந்துட்டார் பாருங்க : புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Published

on

தமிழ் சினிமா உலகின் நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய உண்மையான பெயர் பாதி பேருக்கு இவருடைய தெரியாது. நடிகர் கிங் காங் உடைய உண்மையான பெயர் ‘சங்கர்’. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர். ஏன்னா,அந்த அளவிற்கு இவர் மக்களிடையே நல்ல வரவேற்பையும்,பாராட்டையும் பெற்றவர். மேலும், இவர் அதிகமாக காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும்.

அதுமட்டும் இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இருக்கும். நடிகர் கிங் காங் அவர்கள் 1990 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து அசத்தியவர். அதுமட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடை போட்ட ‘அதிசய பிறவி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

Advertisement

மேலும், இந்த படத்தில் நடிகர் கிங் காங் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவிற்கு தூளாக இருந்தது. மேலும், இந்த படத்திற்கு பிறகு தான் நடிகர் கிங் காங் அவர்களுக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் நிறைய வந்து குவிந்தன.இதுவரை இவர் ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறனால் மக்களிடையே பாராட்டுகளை பெற்றவர். நடிகர் கிங் காங் அவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழக கல்லுரில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சினிமாவில் இவருடைய நடிப்புத் திறனுக்காக தேசிய விருது வழங்கி உள்ளார்கள்.

Advertisement

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இன்று இவரது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் கிங் காங்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in