CINEMA
ரெட்ரோ பாடல்களை கொண்டு வரும் ஐடியா எப்படி வந்தது..? உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்..!!

தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டர் இயக்குனர் அப்படி என்றால் லோகேஷ் கனகராஜ் தான். பாடல்கள் இல்லாமல் படம் எடுப்பது, ஹீரோயின் இல்லாமல் படம் எடுப்பது என பல டிரெண்டுகளை நார்மலாக்கி உள்ளார். பழைய மெட்ரோ பாடல்களை பயன்படுத்தும் முறையையும் அதிக முறை பயன்படுத்தியது இவர்தான். அதன் பிறகு தற்போது பெரும்பாலான படங்களிலும் ரெட்ரோ பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது . இந்த ஐடியா லோகேஷ் இருக்கு எங்கிருந்து வந்தது என்பதை அவரை கூறியுள்ளார்.
ரெட்ரோ பாடல்களை பயன்படுத்தும் ஐடியா அவருக்கு ஊமை விழிகள் படத்தில் இருந்து தான் கிடைத்ததாம். ஊமை விழிகள் படத்தில் அருண் பாண்டியன் சண்டை போடும் காட்சியின்போது பக்கத்தில் இருக்கும் சிலர் தாரை தப்பட்டை அடிப்பார்கள். அதற்கு ஏற்ப அந்த சண்டை காட்சி வடிவமைக்கப்பட்டிருப்பது மிகவும் புதிதாக இருந்தது. அதிலிருந்து தான் எனக்கு ரெட்ரோ பாடல்களை சண்டை காட்சிகளில் பயன்படுத்தும் ஐடியா வந்தது என்று கூறியுள்ளார்.