உலகமே போற்றும் தமிழன், சுந்தர் பிச்சையின் மனைவி பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ… – cinefeeds
Connect with us

Uncategorized

உலகமே போற்றும் தமிழன், சுந்தர் பிச்சையின் மனைவி பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ…

Published

on

கூகுள் நிறுவனத்தில் மிக உயர்ந்த பொறுப்பு வகிக்கும் தமிழன் சுந்தர்பிச்சையை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.இந்த பதிவில் நாம் அவரது மனைவியான அஞ்சலி பிச்சை பற்றி தெரிந்து கொள்ளலாம். யார் இந்த அஞ்சலி பிச்சை? ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் ஓலராம் ஹர்யானி- மாதுரி ஷர்மா என்ற தம்பதிக்கு மகளாக பிறந்தவர் அஞ்சலி.ராஜஸ்தானிலேயே பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கரக்பூரில் உள்ள ஐஐடியில் பி.டெக் கெமிக்கல் இஞ்ஜினியரிங் சேர்ந்தார்.

IIT-யில் படித்துக் கொண்டிருக்கும் போது சுந்தர் பிச்சையின் வகுப்பு தோழியாக அறிமுகமாகியிருக்கிறார். அஞ்சலியை பார்த்ததும் சுந்தர் பிச்சை காதலில் விழ, இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். ஒருகட்டத்தில் அஞ்சலியும், சுந்தர்பிச்சை மீது காதலில் விழ, கடைசி ஆண்டியில் வெளிப்படையாகவே தன்னுடைய காதலை கூறியிருக்கிறார் சுந்தர் பிச்சை.கல்லூரி படிப்பு முடிந்ததும், சுந்தர் மேற்படிப்பு படிக்க அமெரிக்கா பறந்து விட்டார். அஞ்சலி இந்தியாவில் தங்க வேண்டிய சூழல்,

Advertisement

பொருளாதார ரீதியாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுந்தர் நினைத்து தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார். அஞ்சலிக்கும் இங்கே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து பிஸியானார்.செல்போன் அறிமுகமாகாத காலத்தில் நடந்த காதல் இது, அதுவும் காதலன் அமெரிக்காவில் காதலி இந்தியாவில் கிட்டதட்ட ஆறு மாதங்கள் வரை இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள்.

அதன்பின் எப்போதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என பேசுவார்களாம். பொருளாதார ரீதியாக தன்னை மெருகேற்றிக் கொண்டு பெற்றோரிடம் சம்மதம் வாங்கி இந்திய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.திருமணம் முடிந்து அஞ்சலியும் அமெரிக்காவிற்கே சென்று விட்டார். தற்போது கிரண், காவ்யா என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in