ஐயோ கடவுளே.. நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிய 11 வயது சிறுவன்.. திறந்து கிடந்த மின்சாரப் பெட்டிக்குள் ஒளிந்தபோது நடந்த கொடூரம்.. கதறி அழும் தாயின் நெஞ்சை உலுக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே.. நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிய 11 வயது சிறுவன்.. திறந்து கிடந்த மின்சாரப் பெட்டிக்குள் ஒளிந்தபோது நடந்த கொடூரம்.. கதறி அழும் தாயின் நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

Published

on

மேற்கு டெல்லியின் விகாஸ்புரி பகுதியில், சாலையோரத்தில் திறந்து கிடந்த மின்சார ஃபீடர் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை ஆஷிஷ் (11) என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, ஒளிந்து கொள்வதற்காகச் சாலையோரத்தில் கதவு திறந்த நிலையில் கிடந்த மின்சார ஃபீடர் பெட்டிக்குள் சிறுவன் நுழைந்தபோது, எதிர்பாராதவிதமாகக் கடுமையான மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்டான்.

உடனடியாகச் சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விளையாடச் சென்ற மகன் சடலமாகத் திரும்பியதைக் கண்டு சிறுவனின் தாயாரும் குடும்பத்தினரும் கதறி அழுத காட்சி அப்பகுதியினரைச் சோகத்தில் ஆழ்த்தியது. மின்சாரப் பெட்டி உரிய பாதுகாப்பின்றித் திறந்து கிடந்ததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனச் சிறுவனின் உறவினர்கள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பி.எஸ்.இ.எஸ் மின்சார நிறுவனத்தின் முதற்கட்ட விளக்கத்தில், அந்த ஃபீடர் பில்லர் பெட்டியின் மூடி திருடப்பட்டிருந்ததாகவும், இது குறித்துத் தங்களுக்கு முன்கூட்டியே எந்தப் புகாரும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொது இடங்களில் உள்ள மின்சாரச் சாதனங்களைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு யாருடையது என்ற கேள்வியைப் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விபத்துகளால் இனி எந்த ஒரு குழந்தையின் உயிரும் பறிபோகாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in