குட்டி பட்டாஸ் பாடலுக்கு குட்டி தேவதையின் அழகிய நடனம்… மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட வீடியோ..! – cinefeeds
Connect with us

LifeStyle

குட்டி பட்டாஸ் பாடலுக்கு குட்டி தேவதையின் அழகிய நடனம்… மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட வீடியோ..!

Published

on

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

Advertisement

இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தை அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? அடியே..அடியே என்ன் குட்டி பட்டாஸூ..பாடலுக்கு குழந்தை செம ஆட்டம் போடுகிறது. மிக, மிக க்யூட்டாக அந்தக் குழந்தை செல்ல சிணுங்கலுடன் ஆடும் இந்த ஆட்டம் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. முகம் நிரம்ப ததும்பும் மழலைத் தனத்துடன் அந்த குழந்தை செம க்யூட்டாக ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்த காட்சிகளைப் பாருங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in