தன் சொத்துகளையும் வாரிசுகளுக்கு கொடுக்காமல் தன் நாய்க்கு எழுதிவைத்த விவசாயி.. ஏன்னு தெரியுமா? – cinefeeds
Connect with us

Uncategorized

தன் சொத்துகளையும் வாரிசுகளுக்கு கொடுக்காமல் தன் நாய்க்கு எழுதிவைத்த விவசாயி.. ஏன்னு தெரியுமா?

Published

on

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பரிவார கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம் நாராயண வர்மா. விவசாயியான இவர் தனது சொத்து அனைத்தையும் அவருடைய மனைவி சம்பா பாய்க்கும், ஜாக்கி என்கிற அவர் வளர்க்கும் செல்ல நாய்க்கும் மட்டுமே சேரும் என்று எழுதி வைத்துள்ளார்.

நாராயணனின் உயிலில் எனது மனைவி சம்பா பாய் என்னை மிக அக்கறையோடு கவனித்துக் கொண்டாள். என் செல்ல வளர்ப்புப் பிராணியான நாய் என்னை ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டது. இப்போது நான் மிக நலமாக உள்ளேன் என் மரணத்திற்கு பிறகு செல்ல நாய் அனாதை ஆகி விடுமோ என்கிற அச்சம் எனக்குள் இருக்கின்றது. நான் இல்லாத காலத்திலும் எனது நாய் அனாதை ஆகிவிடக்கூடாது என்பதற்காக எனது சொத்தில் ஒரு பாதியை எனது நாய்க்கு எழுதி வைக்கிறேன்.

Advertisement

இறுதி மூச்சு வரை இவர்கள் இருவர் மட்டுமே என்னை கவனிப்பார்கள் என்று நான் நம்புவதால் என் மரணத்திற்கு பின்பும் இவர்கள்தான் எனது இறுதி சடங்கை செய்ய வேண்டும் என அவர் உருக்கமாக அதில் பதிவிட்டுள்ளார். மேலும் தன் மரணத்திற்கு பிறகு தனது நாய் ஜாக்கியை கவனித்துக் கொள்பவர்கள் என் சொத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளார் .

ஓம் நாராயண வர்மாவுக்கு மொத்தம் 18 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 9 ஏக்கர் நாயின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓம் நாராயண வர்மாவுக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இவர்கள் யாருக்கும் சொத்தைக் கொடுக்காமல் நாய்க்கு கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in