LATEST NEWS
விஜய் சேதுபதி படத்தின் காமெடி நடிகருக்கு குழந்தை பிறந்தது..!! மகிழ்ச்சியுடன் பதிவிட்ட நடிகர்..!!
டேனியல் அன்னி போப் ஒரு இந்திய திரைப்பட நடிகர், அவர் தமிழ் மொழி படங்களில் மதிப்பிடப்படாத மற்றும் சிறிய வேடங்களில் தோன்றிய பின்னர், திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற தமிழ் படத்தின் மூலம் நகைச்சுவை நாயகனாக அறிமுகமானவர் டேனியல். இந்தப் படத்திற்கு பிறகு இவர் விஜய் சேதுபதி யோடு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் அவருக்கு நண்பராக நடித்து மிகவும் பிரபலம் ஆனார்.
அதன்பின் தமிழில் கவலை வேண்டாம், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், 3 உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இடைவெளி இல்லாமல் 72 மணி நேரம் மிக நீண்ட நாடக நாடகத்திற்காக கின்னஸ் உலக சாதனை படைத்தார் டேனியல். இவர் பிக் பாஸ் சீசன் 2 கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் இவர் பிரபலம் அடைந்தார்.
இந்த சீசன் முடிந்த பிறகு இவர் தன் காதலியான தெனிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு சினிமா துறையை சார்ந்தவர்களும், இவரது நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
We have been blessed with the most precious gift from the Almighty, our little baby boy! Please keep him in your prayers and bless him. 👶🏻💐🙏🏻
– Daniel Denisha .— Daniel Annie Pope (@Danielanniepope) June 28, 2020
