CINEMA
10 வருட காதல்…. திருமணம் செய்து கொள்ளாமல் காதலருடன் சுற்றும் நடிகை பிரியா பவானி சங்கர்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிற்கும் நடிகை தான் ப்ரியா பவானி சங்கர்.
சின்னத்திரை சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் வெள்ளை திரையில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இறுதியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதிலும் குறிப்பாக இவர் கடந்த பத்து வருடங்களாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார்.
அவருடன் அடிக்கடி டேட்டிங் செல்லும் புகைப்படங்களை இவர் பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் சமீபத்தில் கூட ஈசிஆர் பகுதியில் பெரிய பங்களா ஒன்றை வாங்கி தனது காதலருடன் குடியேறினார்.
அதனைத் தொடர்ந்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
அது மட்டுமல்லாமல் நடிப்பை தாண்டி தற்போது ஹோட்டல் தொழிலையும் இவர் தொடங்கியுள்ளார்.
தற்போது பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.