CINEMA
ஐஸ்வர்யாராய் ஒன்றும் என் மகள் அல்ல…. மாமியார் ஜெயா பச்சன் பேசிய வீடியோ வைரல்….!!
ஐஸ்வர்யாராய் என்னுடைய மகள் அல்ல மருமகள் என்று ஜெயா பச்சன் பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்படுகிறது. ஆனால் நாங்கள் இன்னும் திருமணம் ஆனவர்கள் தான் என்று தன் கையில் இருக்கும் திருமணம் மோதிரத்தை காட்டினார் அபிஷேக் பச்சன் .
இந்த நிலையில் தான் மாமியார் ஜெயா பச்சன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யாவுக்கும், அவருடைய மாமியாருக்கும் ஆகவே ஆகாது என்று பல காலமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அபிஷேக் பச்சனை விவகாரத்து செய்யும் முடிவை ஐஸ்வர்யாராய் எடுப்பதற்கு முக்கிய காரணமே மாமியார் ஜெயா பச்சன் தான் என்று பேசபடுகிறது. இந்த நேரத்தில் ஐஸ்வர்யாராய் ஒன்றும் என் மகள் அல்ல மருமகள் என்று முன்பு ஜெயா கூறிய வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.