CINEMA
விஜய்ண்ணா…! உங்க கணக்கே புரியலண்ணா…. ஏன் இப்படி பண்றீங்க…? புலம்பும் ரசிகர்கள்…!!
சினிமாவின் உச்சபட்ச நடிகர் ஒருவர்தான் விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.செப் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுது. பொதுவாக சினிமாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பது ஒரு கவுரமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையிசென்னையில் இருக்கும் நிறுவனம் ஒன்று 2012ம் ஆண்டு மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் விற்பனைக்கு என்று பதிவிட்டது.
இதை பார்த்தவர்களோ இது விஜய் காராச்சே என்றார்கள். ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்கும் அளவிற்கு பிரச்சனை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் . இந்த நிலையில் தான் விஜய் தன் வீட்டிலிருந்து புது காரில் வெளியே வந்த வீடியோ வைரல் ஆகிவிட்டது. இதனை அடுத்து புது கார் வாங்கிய விஜய்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இருந்தாலும் யாராவது ரோல்ஸ் ராய்ஸ் காரை கொடுத்துவிட்டு லெக்சஸ் காரை வாங்குவாங்களானா … உங்க கணக்கே புரியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.