CINEMA
டீக்கடைகளில் சாதிய தீண்டாமை…. சர்ச்சையாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் பேச்சு..!!

பிரபல இயக்குனர் பாரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் பேப்பர் கப்களில் கூட சாதிய தீண்டாமை இருப்பதாக, இயக்குநர் பா.ரஞ்சித் பேசியிருந்தார். இந்த விவகாரம், தற்போது பேசு பொருளாகியிருக்கிறது.
இப்படிபட்ட தீண்டாமை எல்லாம் ஒழிந்துவிட்டது என்று சிலரும், கிராமப்புறங்களில் இன்னும் பட்டியலின மக்களுக்கு பேப்பர் கப்களிலேயே தான் டீ வழங்கப்படுகிறது என்று சிலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.