LATEST NEWS
என்னது சமந்தா கூட தியேட்டரில் படம் பார்க்கணும்னா 2500 டாலரா?.. அமெரிக்காவில் நடந்த சம்பவத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். அதனைப் போலவே விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே சமந்தா சிகிச்சைக்காக தற்போது அமெரிக்கா சென்று உள்ள நிலையில் அங்கு குஷி திரைப்படத்தின் பிரமோஷனுகாக ஒரு திரையரங்கிற்கு சென்றுள்ளார்.
அங்கு தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்களுக்கு 150 டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 12 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த திரையரங்கில் சமந்தாவுடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்ப்பதற்கு டிக்கெட் கட்டணமாக 2500 டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சம் ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் அந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கு சமந்தாவிற்கு 30 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.