3 குழந்தை பெற்றால் 70 லட்ச ரூபாய் பரிசு..! அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட நாடு..! – cinefeeds
Connect with us

Uncategorized

3 குழந்தை பெற்றால் 70 லட்ச ரூபாய் பரிசு..! அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட நாடு..!

Published

on

தம்பதியினர் 3 குழந்தைகள் பெற்றால் சுமார் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தென்கொரியா அரசு அறிவித்துள்ளமை நாட்டுமக்களை வியப்படையச் செய்துள்ளது. தென்கொரியா South Gyeongsang மாகாணத்தில் உள்ள Changwon நகரில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது.

அதன்படி 3 குழந்தைகள் பெறும் தம்பதிக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.73,33,025) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக திருமணம் செய்துகொள்ளும் தம்பதிக்கு 92 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.67,48,094) கடனாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடன் பெறும் தம்பதி முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும், 2வது குழந்தை பெறும்போது கடன் தொகையில் 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 3வது குழந்தை பெற்றால் முழு தொகையும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை தென்கொரியாவின் இந்த அறிவிப்பானது அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in