54 வயசுல ஊசி போட்டு 20 கிலோ எடை குறைச்சிட்டாங்க…! இணையவாசியை கண்டபடி வசைபாடிய குஷ்பூ..!! – cinefeeds
Connect with us

CINEMA

54 வயசுல ஊசி போட்டு 20 கிலோ எடை குறைச்சிட்டாங்க…! இணையவாசியை கண்டபடி வசைபாடிய குஷ்பூ..!!

Published

on

எண்பதுகளில் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ. ஹீரோயின் என்பதை தாண்டி அரசியல்வாதியாகவும் தன்னுடைய ஈடுபாட்டை காட்டி வருகிறார். படங்கள் தயாரிக்கும் வேலைகளிலும் பிசியாக இருக்கும் குஷ்பூ சமீபத்தில் ஒரு புதிய சீரியலிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும்  சமீபத்தில் தன்னுடைய ட்வீட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், டுவிட்டர் பக்கத்தில் இருந்து வரும் மெசேஜுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்க வேண்டாம் என்றும் கூறினார்.

குஷ்புவின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டது குறித்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இன்னொரு விஷயமும் வைரலாகி வருகிறது. அதாவது குஷ்பூ 54 வயதில்  மவுன்ஜாரோ ஊசியால் தான் 20 கிலோ எடையை குறைத்தார் என்று ஒரு ட்விட்டரில் ஒருவர் பதிவு செய்திருந்தார். இதை கண்ட குஷ்பு உங்களை போன்றவர்கள் எங்களுக்கு எப்போதும் தலைவலியாக இருக்கிறீர்கள்.. நீங்கள் உங்கள் முகத்தை காட்ட மாட்டீர்கள்..  உங்கள் மனம் எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்பது எனக்கு தெரியும்” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in