9 வருடம் கழித்து பிறந்த குழந்தை… முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட செந்தில் – ஸ்ரீஜா தம்பதி… அழகிய புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

9 வருடம் கழித்து பிறந்த குழந்தை… முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட செந்தில் – ஸ்ரீஜா தம்பதி… அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

சின்னத்திரையில் சூப்பர் ஜோடியாக கலக்கிய பலரும் தற்போது நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக ஒன்று சேர்ந்துள்ளனர்.

அவ்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ஜோடி சேர்ந்தவர்கள் தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.

Advertisement

கேரளாவில் பிறந்த ஸ்ரீ ஜா கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியல்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்துள்ளார்.

Advertisement

அதில் குறிப்பாக இவருக்கு நல்ல பெயரை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

இதில் ஜோடியாக நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீ ஜா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.

Advertisement

முதலில் தாங்கள் நண்பர்கள் என்று கூறி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டனர்.

Advertisement

இதனிடையே திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜா தமிழில் கணவருடன் இணைந்து வெப் சீரிஸ் நடித்தார்.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாக செந்தில் அறிவித்திருந்த நிலையில் 9 வருடங்களுக்குப் பிறகு செந்தில் மற்றும் ஸ்ரீஜா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Advertisement

தற்போது அவர்களின் மகனுக்கு ஆறு மாதம் ஆகியுள்ள நிலையில் மகனின் புகைப்படங்களை முதன்முறையாக செந்தில் வெளியிட்டிருந்தார்.

அந்த க்யூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in