LATEST NEWS
புடவையில் க்யூட்டான லுக்கில் கோவிலுக்கு சென்ற இரவின் நிழல் பட நடிகை… வர்ணிக்கும் ரசிகர்கள்..!!
பிரபல சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவோடு வந்த இவர் பல வருடங்களாக முயற்சித்தும் அந்த ஆசை நிறைவேறவில்லை.
அதனால் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் இவர் அரை நிர்வாணமாக நடித்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் இவர் நிர்வாணமாக நடித்ததை பலரும் விமர்சித்தனர்.
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் ரேகா நாயருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது இவர் சென்னையில் உள்ள ஞாயிறு ஸ்தலம் ஞாயிறு கிராமத்தில் சூரியனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
புடவையில் சென்று க்யூட்டான லுக்கில் சுவாமி தரிசனம் செய்த அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
